பக்கம் 1
பாட்டி சூடான சப்பாத்திகள் செய்கிறார். அர்ஜுன் அவற்றை எண்ணுகிறான்: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு.
பக்கம் 2
அர்ஜுன் மறுபடியும் எண்ணுகிறான். ஒன்று, இரண்டு, மூன்று. நான்காவது எங்கே?
பக்கம் 3
சுவர் மேல் ஒரு பூனை உட்கார்ந்திருக்கிறது. அதன் வாய் நிறைய ஏதோ இருக்கிறது!
பக்கம் 4
“நில்லு, பூனை!” என்று அர்ஜுன் கத்துகிறான். பூனை ஓடுகிறது. அர்ஜுன் ஓடுகிறான். பாட்டியும் ஓடுகிறார்!
பக்கம் 5
பூனை கூரை மேல் குதிக்கிறது. சப்பாத்தி கீழே விழுகிறது, சரியாகப் பாட்டியின் தலை மேல்!
பக்கம் 6
பாட்டி சிரிக்கிறார். “பூனையே, அடுத்த தடவை கேட்டு வாங்கிக்கோ!” அவர் பூனைக்குக் கொஞ்சம் பால் தருகிறார்.